×

கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் சாலையில் செல்லும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

அரூர் : அரூர் அருகே அ.பள்ளிப்பட்டி முதல் ஊத்தங்கரை வரை நெடுஞ்சாலைதுறை சார்பில், 47 கி.மீ வரை ₹300கோடி மதிப்பீட்டில், 4 வழிச்சாலையாக மாற்ற பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்கென சாலையோர மரங்கள் அகற்றப்பட்டு, ஆங்காங்கே சாக்கடை நீர் செல்வதற்கான கால்வாய்கள், மழை நீர் வடிகால்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது. இதே போல் அரூர்- சேலம் சாலையில் கோபிநாதம்பட்டி கூட்ரோடு பேருந்து நிறுத்தத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.முறையாக கழிவுநீர் செல்ல வழி ஏற்படுத்தப்படாததால், கடந்த 6 மாதமாக கழிவு நீர் சாலையில் செல்கிறது. பறையப்பட்டிபுதூர், ஜம்மணஅள்ளி, சர்க்கரை ஆலை உள்ளிட்ட ஊர்களுக்கு அந்த சாக்கடை நீரை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. வாகனங்கள் அந்த வழியாக கடந்து செல்லும் போது, பேருந்திற்காக காத்திருப்பவர்கள் மீது கழிவு நீரை தெளிக்கிறது. மேலும் கழிவுநீர் தேக்கத்தால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.இதனால் தொற்று ேநாய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, கழிவுநீர் செல்ல வழி ஏற்படுத்த ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் சாலையில் செல்லும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Tags : Gopinathampatti Kootrodu ,Aroor ,A. Pallipatti ,Uthangarai ,
× RELATED நாய் கடித்து மான் சாவு